உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி, பக்கநாடு பகுதியில், கரியகாளியம்மன், விநாயகர், கண்ணாமூச்சி முனியப்பன் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, கடந்த, 21ல், பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, யானை, குதிரைகள், பசுமாடுகள் ஆகியவற்றுடன், ஆடையூரிலிருந்து, பக்கநாடு வரை, ஏராளமானோர், தீர்த்தக்குடங்களை எடுத்துவந்தனர். நேற்று, கரியகாளியம்மன், விநாயகர், ஸ்ரீகண்ணாமூச்சி முனியப்பன் கோவில்களின் கோபுர கலசங்களுக்கு, வேதமந்திரம் முழங்க, புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதில், திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி அருகே, கோணங்கிபாளையம், கணபதி, மாரியம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நான்குகால யாகபூஜைக்கு பின், கணபதி கோவில் கோபுர கலசம், மாரியம்மன் கருவறை கோபுர கலசத்துக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !