நீங்கள் யார் பக்கம்?
ADDED :2599 days ago
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு பிரச்னை தீர வழிதெரியாமல் குழம்பினார். அவரது நண்பரிடம் பிரச்னையை சொல்லியும் தீர்வு கிடைக்கவில்லை. லிங்கனிடம் “நண்பரே கலங்க வேண்டாம். ஆண்டவர் உம்பக்கம் இருப்பார்” என்றார் நண்பர். “ஆண்டவர் என் பக்கம் இருக்க வேண்டுமென்பது என்பதல்ல; நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” என்றார் லிங்கன். குழப்பத்திலும் அவர் மனதில் இருந்த தெளிவைப் பார்த்தீர்களா! எப்போதும் கடவுள் நம் பக்கம் வர வேண்டும் என்பதை விட நாம் அவர் பக்கம் இருப்பதே மேலானது.