பிரசாதம் இது பிரமாதம்
ADDED :2599 days ago
பால்கோவா
என்ன தேவை
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 4
பச்சைக் கற்பூரம் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 25 கிராம்
* எப்படி செய்வது? முந்திரிப்பருப்பை ஒடித்து 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். சர்க்கரை ஏலக்காயை தூள் செய்யவும். அடி கனமாக களிம்பேறாத பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். பால் கெட்டியான பின் சர்க்கரை மாவையும் சேர்த்துக் கிளறி நெய், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரிப்பருப்பை சேர்க்க சுவையான பால்கோவா தயாராகி விடும்.