ஸ்ரீருத்ரம்
ADDED :2599 days ago
ஸ்ரீருத்ரம் என்பது ஈஸ்வரனைப் போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமா பாதங்களிலிருந்தும் விடுபடுகிறான். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகிறான். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்தியோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் - மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். ஸ்ரீருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி; ஸ்மிருதியிலும் சரி - கிடையாது என்று சூத சம்ஹிதை கூறுகின்றது. 11 முறை ருத்ரம் சொல்வது, ‘ஏகாதச ருத்ரம்’ எனப்படும். இதை 11 நபர்கள் ஒருமுறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது ‘லகு ருத்ரம்’ லகு ருத்ரத்தை 11 முறை கூறினால் மகா ருத்ரம். இந்த மகாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது ‘அதிருத்ரம்’ ஆகும்.