உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமணரைக் கழுவேற்றிய வரலாறு

சமணரைக் கழுவேற்றிய வரலாறு

பாண்டியன் சைவநெறியின் சிறப்புணர்ந்தான். ஆயினும் பாண்டிய நாடு முழுவதும் சமணக்காடுகளே மண்டிக்கிடந்தன. அவற்றை வேருடன் களையத் திருஉள்ளம் கொண்டார் திருஞான சம்பந்தப் பெருமான். அப்போது எண்ணாயிரம் சமணர்களும் சம்பந்தரைப் போட்டிக்கு அழைத்தனர். மன்னர் முன் நடந்த போட்டியில் சமணர்கள் தாம் கற்ற மந்திரங்களைத் தனித்தனியே பச்சை ஓலைகளில் எழுதி தீயில் இட்டனர் ஓலைகள் அனைத்தும் எரிந்து கருகின. சம்பந்தர் ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்னும் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்டார். அது எரியாது பசுமையாகவே இருந்தது. அடுத்து. சமணர்கள் தம் ஏட்டை வையை ஆற்றில் இட்டனர் சம்பந்தரும் ‘வாழ்க அந்தணர்’ என்னும் திருப்பதிக ஏட்டை ஆற்றில் இட்டனர். சமண ஏடுகள் நீர்வழி சென்றன. சம்பந்தர் இட்ட ஏடு மட்டும் நீர் போக்கை எதிர்த்துச் சென்றது. இவ்வாறு அனல் வாதத்திலும் நீர் வாதத்திலும் சமணரை வென்று அவர்களைக் கழுவேற்றி சைவம் தழைக்கச் செய்தார். முருகனின் அவதாரமான ஆளுடையப் பிள்ளையார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !