உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுப்புடன் வாழுங்கள்

பொறுப்புடன் வாழுங்கள்

ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வாசலில் ஒரு சிறுவன் தன் தந்தையைப் பார்ப்பதற்காக நின்றான். அதை அறிந்த ஒரு தொழிலாளி “தம்பி! இங்கே வருபவர்கள் எல்லோரும் ஹெல்மெட் போட்டிருப்பார்கள். முகம் தெரியாது. உன்னால் உன் தந்தையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. நீ வீட்டுக்குப் போ.  அவர் அங்கே தானே வருவார்” என்றார். பையன் மிக அருமையாக, ‘எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், அவருக்கு என்னைத் தெரியுமே” என்றான். “கடவுள் நம்மை அறிந்திருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்கிறது பைபிள். ஆண்டவர் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக மனிதன் இஷ்டம் போல வாழவோ, பாவம் செய்யவோ கூடாது. அவர் மறைந்திருந்து நம்மைக் கவனிக்கிறார் என்பதை உணர்ந்து பொறுப்புடன் வாழ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !