கள்ளக்குறிச்சியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உறியடி திருவிழா
ADDED :2591 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித்திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி, புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் சித்தேரி தெரு நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. சித்தேரி தெரு நவநீதகிருஷ்ணன் கோவிலில் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு, யானை மற்றும் குதிரை பரிவாரங்களுடன் ஊர்வலம் வந்து அருள்பாலித்தனர். சேவை, சாற்றுமுறை வைபவங்கள் நடத்தி பக்தர்கள் பெருமாள் கோவில், கடைவீதி, கவரைத் தெரு ஆகிய பகுதிகளில் உறியடித்தனர். மந்தைவெளியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.