புதுச்சேரியில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி தீபாராதனை
புதுச்சேரி: புதுச்சேரி அகில உலக கிருஷ்ணா மந்திர் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று (செப்., 3ல்) காலை 10.30 மணிக்கு, ஹரே கிருஷ்ண பஜனை மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். தொடர்ந்து மாலை 5.00 மணி வரை தீபாராதனை, பஜனை, கீர்த்தனை, சிறப்பு உபன்யாசம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி மாணவர்களின் சிறப்பு நாடகம் நடந்தது. ஆன்மிக வேடமிட்டு வரும் சிறுவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
இரவு 9.00 மணிக்கு கிருஷ்ணருக்கு 1008 பால் கலச அபிஷேக த்துடன் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் கிருஷ்ணர் பிறந்த நேரமான நள்ளிரவு 12.00 மணிக்கு, கிருஷ்ணருக்கு மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளைபுதுச்சேரி அகில உலக கிருஷ்ணா மந்திர் செய்திருந்தனர்.