ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் ஆவணி விழா
ADDED :2675 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயில் ஆவணி விழா ஆக. 17 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, சவசு- கடப்பலி உள்ளிட்ட மண்டகபடிதாரர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய விழாவான பூக்குழி விழா செப். 7ல் நடைபெறுகிறது.