உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினத்தில் ஒலியுல்லாஹ் தர்கா நாளை (செப்., 7ல்) கொடியிறக்கம்

பெரியபட்டினத்தில் ஒலியுல்லாஹ் தர்கா நாளை (செப்., 7ல்) கொடியிறக்கம்

பெரியபட்டினம்:பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. 117ம் ஆண்டு மதநல்லிணக் கத்திற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றம் கடந்த ஆக., 18 அன்று 50 அடி உயரமுள்ள மினராவில் ஏற்றப்பட்டது. உலக நன்மைக்கான மவுலீது எனும் புகழ்மாலை ஓதப்பட்டது. கடந்த ஆக., 28 நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும்பங்கேற்றனர். செப்., 7 (வெள்ளி) அன்று மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படும். ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழாக்கமிட்டியினர், சுல்தானியா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !