சாயல்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :2600 days ago
சாயல்குடி:சாயல்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.கடந்த ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி,
இன்னிசைப்பாட்டு, பட்டிமன்றம், விளக்கு பூஜை அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை நகர் யாதவ இளைஞர் பேரவை,விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.