கரூர் பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
ADDED :2601 days ago
கரூர்: க.பரமத்தி அடுத்த, புஞ்சைகாளகுறிச்சி வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 4ல்) சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கிருஷ்ணன் பிறப்பு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் உறியடி விழா நடந்தது. இதில், திரளானோர் பங்கேற்று உறியடி த்தனர். முன்னதாக, பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடந்தது. சுவாமி வீதி உலாவுடன், விழா நிறைவடைந்தது.