புதுச்சேரி அங்கையற்கண்ணி சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2609 days ago
புதுச்சேரி: கோரிமேடு அங்கையற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவில், 13ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோரிமேடு திருநகரில் உள்ள அங்கையற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவிலில் 13ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருகல்யாண உற்சவம், நேற்று முன்தினம் (5ம் தேதி), விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று (6ம் தேதி) காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, மகா தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், சுந்தரேசர் – அங்கையற்கண்ணி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.