உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் ஆவணித் திருவிழா: பச்சை சாத்திய கோலத்தில் சண்முகர் உலா

திருச்செந்துார் ஆவணித் திருவிழா: பச்சை சாத்திய கோலத்தில் சண்முகர் உலா

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8ம் நாளான நேற்று பச்சை சாத்திய கோலத்தில் சுவாமி சண்முகர் உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலாவருகிறார். விழாவின் 8ம் நாளான நேற்று பச்சை சாத்திய கோலத்தில் சுவாமி சண்முகர் உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழாவான செப் 8 அதிகாலையில் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !