மகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மகுடஞ்சாவடி: காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக நடந்தது. மகுடஞ்சாவடி அருகே, நடுவனேரி, சின்ன பெத்தானூரிலுள்ள, காளியம்மன் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 5ல்) காலை, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று (செப்.,6ல்) காலை, இரண்டாம் காலயாக பூஜை நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து பூஜை செய்யப்பட்ட தீர்த்தங்களை, காலை, 9:30 மணிக்கு, கோபுர கலசங்களில் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் மீது, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. திரளானோர், அம்மனை தரிசித்தனர்.
செல்லியம்மனுக்கு...: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, சுப்பராய படையாச்சியூர், செல்லியம்மன், விநாயகர், கந்தசாமி கோவில் களில், சிவாச்சாரியர்கள், வேதமந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீரூற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.