ஆலவாயன் திருக்கோயிற் பரப்பளவு
ADDED :2596 days ago
792 அடி அகலம் 847 அடி நீளம் = சுமாராக 670,824 சதுர அடி. இதில் இரு பாகமாய் ஸ்ரீ மீனாக்ஷி அன்னையின் கோயிலும் அய்யன் சொக்கேசன் அய்யனின் கோயிலும் நான்கு மிகப்பெரிய ராஜ கோபுரங்கள் நாற்திசையில் நிற்க நடுவே அமைந்ததாகும். இதன் பரப்பிற்குள் அமையப்பெற்ற அனேக சிறு சிறு கோயில்கள் பெரிய மண்டபங்கள் கலைக் களஞ்சியங்கள் பிரகாரங்கள், பொற்கோபுரங்கள், பொற்றாமரை வளாக மண்டபங்கள் என ஒவ்வொன்றினைப் பற்றிய விபரத்துடன் இவை யார் யாரால் எப்போது கட்டுவிக்கப்பட்டன என்பதை பெரிதும் காண்பித்தது திருவாலவாயுடையார் திருப்பணி மாலை என்ற நூலேயாகும்.