உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சித்தணி விநாயகர், திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சித்தணி கிராமத்தில் உள்ள விநாயகர், திரவுபதி அம்மன், பொறையாத்தாள், அங்கமுத்து மாரியம்மன், லட்சுமிநாராயணன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (செப்.,7ல்) கும்பாபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் (செப்.,6ல்) மாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி யது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (செப்., 7ல்) காலை யாகசாலை பூஜை முடிந்து, காலை 7:00 மணிக்கு கடம் புறப்பாடாகி விநாயகர், அங்கமுத்து மாரியம்மன், திரவுபதி அம்மன் உள்ளிட்ட ஐந்து கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !