நீலகிரியில் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
ஊட்டி: நீலகிரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை;ஆண்டுதோறும் நடந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் போது, களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பூஜித்த பிறகு, நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. ரசாயன சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசுப்படுவதால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதன்படி, சுற்று சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிப்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். வர்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு குன்னூரில் லாஸ் நீர்வீழ்ச்சி; ஊட்டியில் காமராஜர் சாகர் அணை; கூடலூரில் இரும்புபாலம் ஆறு; பந்தலூரில் பொன்னானி ஆறு; கோத்தகிரியில் உயிலட்டி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.