குமாரபாளையத்தில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
ADDED :2603 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், விநாயகர் சிலைகள் வைப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சிலைகள் வைக்க அனுமதி, சிலை கரைக்கும் இடம், நேரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வரைமுறை, சிலைகளின் மாசற்ற தன்மை, ஆகியவை குறித்து, ஆர்.டி.ஓ., அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகள் வைப்பவர்கள் வழிபாடு நடத்தி, நீர் நிலையில் கரைக்கும் வரை அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்திற்கு உரியவர்களிடம் அனுமதி கடிதம், தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று, மின் வாரிய அனுமதி கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். சிலைகள் வைக்க விண்ணப்பித்த, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.