உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடத்தூரில் கோவில் குளத்தை தூர்வார மக்கள் வேண்டுகோள்

கடத்தூரில் கோவில் குளத்தை தூர்வார மக்கள் வேண்டுகோள்

கடத்தூர்: மூடி கிடக்கும் கோவில் குளத்தை, தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறமுள்ள குளத்தை கடந்த, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கோவில் குளம் முறையாக பராமரிக்கப்படாமல், குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு தற்போது, முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. கோவில் குளத்தை தூர்வார சில ஆண்டுகளுக்கு முன், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோவில் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !