உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடியில் ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

தாண்டிக்குடியில் ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

தாண்டிக்குடியில்: பட்டத்துவிநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. முன்னதாக பக்தர்கள் விளக்கேற்றினர். சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சிவன் மற்றும் மீனாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சின்னாளபட்டி: பிரதோஷத்தை முன்னிட்டு, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷே கம் நடந்தது.

கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம் பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !