திருவாரூர் பதஞ்சலி மனோகர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
திருவாரூர்: தியாகராஜசுவாமி கோயிலைச் சேர்ந்த அன்னதானக் கட்டளைக்குச் சொந்தமான திருவிளமர், பதஞ்சலி மனோகரர் கோயிலில், (சிவபாத ஸ்தலம்) ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 12.09.2018 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 7.30 க்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்
06.09.2018, மாலை 6 -7 மணி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை ஸங்கல்பம், மஹா தீபாராதனை
07.09.2018 காலை 8 மணி, மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம்
காலை 11 மணி மஹா பூர்ணாஹூதி தீபாராதனைகள்
மாலை 6.30 மணி, வாஸ்து சாந்தி ப்ரவேச பலி, ரக்ஷோக்கன ஹோமம், பைரவர் அபிஷேகம்.
08.09.2018 காலை 8 மணி, சாந்தி ஹோமம், திசா ஹோமம்
மாலை 6 மணி, கிராம சாந்தி ம்ருத்ஸங்க்ரஹணம்
09.09.2018 காலை 8 மணி பஞ்சாஸ்த்ர ஹோமம், மூர்த்தி ஹோமம், ப்ரசன்னாபிஷேகம்
காலை 9 மணி தீர்த்தஸங்க்ரஹணம் (கங்கை எடுத்தல்)
மாலை 5 மணி அங்குரார்ப்பணம், ரக்ஷ்õபந்தனம், கும்பலங்காரம்
மாலை 6.30 மணி, கலாகர்ஷணம், யாகசாலைப்பிரவேசம் முதல் கால
யாக பூஜைகள் துவக்கம், ஹோமங்கள்
இரவு 9 மணி, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை
10.09.2018 காலை 7.30 மணி, இரண்டாம் கால யாக பூஜைகள் துவக்கம், ஆச்சார்ய
விசேஷ சந்தி ஹோமங்கள் காலை 11.30 மணி, நிகழ்நிரல்: மஹா பூர்ணாஹூதி தீபாராதனை
மாலை 6 மணி, மூன்றாம் கால யாக பூஜைகள் துவக்கம், ஸந்த்யா அனுஷ்டானம், ஷன்னவதி ஹோமங்கள் இரவு 8.30 மணி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை
11.09.2018, காலை 8 மணி, நான்காம் கால யாக பூஜைகள் துவக்கம், ஷன்னவதி,
ஹோமங்கள், கஜ பூஜை
காலை 11 மணி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை
மாலை 6 மணி, ஐந்தாம் கால யாக பூஜைகள் துவக்கம், லக்ஷ்மி, கோ, சுஹாசினி, கன்யா பூஜைகள், ஹோமங்கள்
இரவு 9மணி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை
12.09.2018 அதிகாலை 4 மணி, ஆறாம் கால பூஜைகள் துவக்கம், பிம்பசுத்தி,
ரக்ஷாபந்தனம், ஸபர்ஸாஹூதி
காலை 6.15 மணி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, கடங்கள் புறப்பாடு
காலை 7 மணி, விமான மஹா கும்பாபிஷேகம்,
காலை 7.15 மணி, மூலவர் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, அருட் பிரசாதங்கள்,
இரவு 7, யஜமானோத்ஸவம்.
விழா நாட்களில் வேத பாராயணம், சிவாகம பாராயணம், திருமுறை பாராயணம், நாதஸ்வரம் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிவஆகம ரத்னம், ஈசான சிவம், நயனார், பி. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மாம்பூ பரமேஸ்வர ஆகமபவனம், திருவாரூர்.