உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்.12 ல் தேச பக்தி பாடல் மதுரபாஷினி கோயில் கும்பாபிஷேகம்

செப்.12 ல் தேச பக்தி பாடல் மதுரபாஷினி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர்: திருவாரூர் அடுத்த,விளமலில் பதஞ்சலி மனோகர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மதுரபாஷினி அம்மனை குறித்து தான் பக்கிம் சந்தர் சட்டர்ஜி தேசபக்தி பாடலான வந்தே மாதரம் பாடலில் மதுரபாஷினி அம்மனை குறித்து பாடியதாக கூறுவர்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலில் 12ம் தேதி காலை மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவில், திருவாரூர் தியாகராஜர்கோவிலைச்சேர்ந்த அன்னதான கட்டளைக்கு சொந்தமானது. கடந்த,2004ல், இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தற்போது, திருப்பணிகள் முடிந்து, வரும், 12ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கடந்த, 6ம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. இன்று மாலை,6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. நாளை,10ம்தேதி காலை7:30 மணிக்கு, இரண்டாம்கால யாகசாலை பூஜைகள்; மாலை 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாகாசலை பூஜைகள் துவங்குகின்றன. வரும், 11ம் தேதி காலை 8:00 மணிக்கு, நான்காம்கால யாகசாலை பூஜைகள்; மாலை 6:00 மணிக்கு ஐந்தாம்கால யாகசாலை பூஜைகள்; 12ம்தேதி அதிகாலை 4:00  மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. அன்று காலை,6:00 மணிக்கு கடங்கள் புறப்பாடு;காலை 7:00 மணிக்கு விமான கும் பாபிஷேகம்; காலை 7:15 மணிக்கு மூலவர் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள்  மற்றும் கோவில் அர்ச்சகர் சந்திரசேகர சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !