உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை தெப்போற்சவத்தில் ஆழிலை கண்ணன்

உடுமலை தெப்போற்சவத்தில் ஆழிலை கண்ணன்

உடுமலை: உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ விழாவையொட்டி, தெப்போற்சவ விழா நேற்று நடந்தது. உடுமலை, பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த, 3ம் தேதி முதல், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா  நடந்து வருகிறது. தினமும், மாலையில், கண்ணனின் அவதாரங்களான, கோபால கிருஷணா அவதாரம், தவழும் கண்ணன், வெண்ணை தாழி கண்ணன், ஸ்ரீ வித்யா ராஜகோபாலன், கோவர்த்தனகிரி கண்ணன் என பல்வேறு அலங்கார பூஜைகள் நடந்தன. பூமிநீளாநாயகி  சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று, ஜெயந்தி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான புன்னை மரக்கண்ணன் ஜலக்கிரீடை தெப்போற்சவ வைபவம் மற்றும் இயற்பாபிரபந்த சேவை நடந்தன. இன்று, மாலை, 6:00 மணிக்கு கண்ணன்  உறியடி உற்சவம் மற்றும் நாலாயிர திவ்யபிரபந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !