மாறநாயனார் குருபூஜை விழா
ADDED :2594 days ago
இளையான்குடி:இளையான்குடியில், மாறநாயனார் சுவாமி குருபூஜைவிழா நடைபெற்றது. சிவபெருமான் தொண்டர்கள் யாவாராயினும் அவர்தம்பசியை தீர்க்கும் பொருட்டு அடியார்களுக்குத் திருவமுதுசெய்விப்பதையே தலையாய பணியாய் செய்து வந்த மாறநாயனார்குருபூஜை விழா ஸ்ரீ ஞானாம்பிகை உடனாய ராஜேந்திரசோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. காலை முதல் சிறப்புஹோமம், ஞானாம்பிகை ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமிக்குமஹா அபிேஷகம் நடைபெற்றது. அபிேஷகம், சிறப்பு பூஜைதீபாராதனையை தொடர்ந்து, அன்னம் பாலிப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஞாலம் உய்ய வந்த நாயகன்என்னும் திருமுறை பன்னிசை, அருளுரையை, சுவாமி.அரிகரதேசிகர் ஓதுவார் வழங்கினார். இரவு, ரிஷப வாகனத்தில்சுவாமி மற்றும் மாறநாயனார் திருவீதி உலா நடைபெற்றது.