உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா

வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், யதுகுல வேணுகோபால பஜனைக் கோவில், கண்ணன் அவதார விழாவில், ஐந்தாம் நாள் உற்சவத்தில், வேணுகோபால சுவாமி, கருட வாகனத்தில் உலா வந்தார். காஞ்சிபுரம், பாண்டவ பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில், யதுகுல  வேணுகோபால பஜனைக் கோவில் உள்ளது. உற்சவ நாட்களில், சுவாமி வீதியுலா செல்வதற்கு, சப்பரம், கருடன், அனுமந்தம், குதிரை, யானை, ஆதிசேஷன், சந்திர, சூரிய பிரபை என, புதிய வாகனங்கள் செய்யப்பட்டு கரிகோலம் எனப்படும், வெள்ளோட்டம் கடந்த வாரம்  நடந்தது.இக்கோவிலில், 14 நாட்கள் நடைபெறும் கண்ணன் அவதார விழா, 3ம் தேதி துவங்கியது. அன்று காலை, வேணுகோபால பெருமானுக்கு திருமஞ்சனமும், மாலையில், கோலாட்டம், வழுக்கு மரம் ஏறுதல் நடந்தன.மாலையில், ஒவ்வொரு நாளும், சப்பரம், சூரிய  பிரபை, சந்திர பிரபை, சேஷ வாகனத்தில் பெருமான் வீதியுலா வந்தார். ஐந்தாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, கருட வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி, முக்கிய வீதிகள் வழியே உலா வந்தார்.வரும், 15ல் உறியடி திருவிழா நடைபெறுகிறது. 16ல்,  ஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !