உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசை பூஜை

கன்னிவாடி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசை பூஜை

கன்னிவாடி;தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவர், உள்பிரகார வலம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆத்தூர் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !