உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம் லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்து மூன்று ஆண்டு முடிந்து, நான்காம் அண்டு துவக்க விழா முன்னிட்டு, கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜை நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் காலையில் தீர்த்தக் குடம் எடுத்து வருதலோடு சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கின. அதைத்தொடர்ந்து, கோவிலில் கணபதி ஹோமம் பூஜை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !