உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் ஆவணி அமாவாசை ஆஞ்சநேயருக்கு பூஜை

வீரபாண்டியில் ஆவணி அமாவாசை ஆஞ்சநேயருக்கு பூஜை

வீரபாண்டி: ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆவணி அமாவாசையை முன்னிட்டு, சேலம் அருகே, காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜை, நேற்று (செப்., 9ல்)நடந்தது.

தொடர்ந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. பின், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம், வடைமாலை, வெற்றிலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், தரிசனம் செய்தனர். அதேபோல், இடைப்பாடி, கவுண்டம்பட்டி, சின்னமாரியம்மனுக்கு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. மேலும், இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர், வெள்ளார் நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர், மூக்கரை நரசிம்ம பெருமாள், கவுண்டம்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !