குமாரபாளையத்தில், விநாயகர் சதுர்த்தி கொலு துவக்கம்
ADDED :2634 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் கொலு வைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. குமாரபாளையத்தில், ஆண்டுதோறும், 100க்கும் மேலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தி காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விட்டலபுரி, ஸ்ரீபாண்டுரங்கர் கோவில் முன் ஸ்டார் நண்பர்கள் சார்பில், ஒன்பதாம் ஆண்டு விநாயகர் கொலு வைக்கும் விழா நடந்தது. நேற்று (செப்., 9ல்) காலை கணபதி யாகம் நடத்தப்பட்டு, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.