தரையில் படுத்த பெருமாள்!
ADDED :2596 days ago
மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் ஆதிசேஷன் மீது காட்சியளிப்பதே வழக்கம். ஆனால், இவர் பாம்பு இல்லாமல் தரையில் சயனம் கொண்டிருக்கும் தலம் மாமல்லபுரம். புண்டரீக மகரிஷிக்கு மனிதவடிவில் இங்கு காட்சி தந்தார். அருகில் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்கள் இல்லை. சங்கு சக்கரம், நாபிக்கமலம் எதுவுமே இல்லாமல் இருக்கிறார். இத்தகைய கோலத்தில் பெருமாளை வேறெங்கும் காணமுடியாது. வடமொழியில் இவரை ‘ஸ்தலசயனப் பெருமாள்’ என்றும், தமிழில் ‘தரைகிடந்த பெருமாள்’ என்றும் சொல்வர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்குள்ள நிலமங்கைத்தாயார் சந்நிதியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையில் கோலமிட்டு தொட்டில் கட்டி பிரார்த்திப்பர்.