உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்!

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்!

உறவினர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். “அல்லாஹ்வின் துõதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்லவிதமாக நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுடன் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்.” அதற்கு நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான்; நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை!” என்றார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !