மரக்காணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல உற்சவம்
ADDED :2582 days ago
மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் (செப்.,9ல்) காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலமாக வந்து ஊஞ்சலில் எழுந்தருளினார். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவளர் சின்னசாமி, ராஜேந்திரன் செய்திருந்தனர்.