உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள்

அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள்

பிரபஞ்சத்திற்கு அன்னையும் பிதாவுமாக இருப்பவர்கள் சக்தியும் சிவமும் ஆகும். நமது உடலைச் சூத்திர பிரம்மாண்டம் என கூறுவர் யோகியர். பிரபஞ்ச பிரம்மாண்டத்திற்கு உடல் பிரம்மாண்டம் என இருவேறாகும். பிரபஞ்ச பிரம்மாண்டத்தில் இருந்து வந்ததே உடல் பிரம்மாண்டம். இதனை அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது பழஞ்சொல். அண்டத்திலுள்ள 96 தத்துவங்களும் நமது உடலிலும் சரீரத்திலும் உள்ளது என்பதே அப் பழஞ்சொல்லின் விளக்கம். நமது மெய் என்ற உடலின் சிவ வடிவாய் இருப்பது ஆன்மா. சக்தி வடிவாய் இயங்குவது குண்டலினி. குண்டலினி என்பது சக்தி வடிவம் என்பதை லலிதா சஹஸ்ர நாமாவிலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஏனைய சாக்த வழிபாட்டு சாஸ்திரங்களிலும் விரிவாய்க் கூறப்பட்டுள்ளது.

சுழுமுனை நாடிகள்

நமது உடலில் முதுகெலும்புக் கோர்வை மிக முக்கியமான அவயவம். இக்கோர்வைக்கு மேரு தண்டம் என்றும் வீணா தண்டம் என்றும் பிரம்ம தண்டம் என்றும் பெயர்கள் உண்டு. இதன் உட்புறத்தில் இருப்பது சுசும்னா என்ற நாடி. இதை தமிழில் சுழுமுனை என்பது. இச்சுழுமுனை நாடியில் இருந்துதான் நமது உடலில் வியாபித்திருக்கும் 72000 நாடிகளும் இணைகின்றன. ஜன்னியமாகிறது

ஆறு ஆதாரங்கள்

சுழுமுனையின் ஆறு இடங்களையும் ஆதாரங்கள் என்ற கூறுவார்கள். சுழுமுனை நாடியானது நமது சிரசின் உட்பாகத்தில் முதுகெலும்பின் நடுவழியாக கீழ்நுனிவரை சடைபோல் விழுது போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து கீழ் பாகத்தில் நான்கு பெருநாடிகள் பிரியும் இடத்திற்கு ""மூலாதாரம் என்று பெயர். நான்கு நாடிகள் பிரிவதால் நான்கு இதழ்க் கமலம் என்றும் இதனைக் கூறுவர். அதற்கு மேல் ஆறு நாடிகள் பிரியும் இடத்தினை ""ஸ்வாதிஷ்டானம் என்றும் அதற்கும் மேல் பத்து நாடிகள் பிரியும் இடத்தை ""மணிபூரகம் என்றும் அதற்கும் மேல் பன்னிரெண்டு நாடிகள் பிரியுமிடத்தை ""அநாகதம் என்றும். அதற்கும் மேல் பதினாறு நாடிகள் பிரியும் இடத்தை ""விசுத்தி என்றும் அதற்கும் மேல் நாடிகள் பிரியும் இடத்தை ""ஆக்ஞை என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !