காரியாபட்டியில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உற்ஸவம்
ADDED :2578 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உற்ஸவத்தை முன்னிட்டு சென்னை குளோபல் ஆர்கனைசேஷன் டிவினிடி இந்தியா டிரஸ்ட் சார்பாக, காரியாபட்டி நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா 10 நாட்கள் நடந்தன முக்கிய நிகழ்ச்சியாக கிருஷ்ணர், ராதா திருமண வைபவம் நடந்தது. கிருஷ்ணர் ராதை சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.திருமண சீர்வரிசை சுமந்து வந்த பக்தர்கள் கிருஷ்ணரை வழிபட்டனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.