உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் சுல்தான்பேட்டையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன பொதுக்கூட்டம்

சூலூர் சுல்தான்பேட்டையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன பொதுக்கூட்டம்

சூலூர்: சுல்தான்பேட்டையில் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று செப்.,14ல் நடந்தது.

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், 12 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் செப்.,13ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நேற்று செப்.,14ல்  மாலை செஞ்சேரிமலை அடிவாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தலைமை வகித்தார்.

இ.மு., மாநில செயலாளர் அண்ணாதுரை பேசுகையில், இந்துக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயமாக உள்ளது. நாட்டை சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும், என்றார்.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மோகன் மந்திராஜலம் பேசுகையில், ஒவ்வொருவரும் இந்து என்ற உணர்வுடன் வாழ்ந்தால், எந்த சக்தியாலும் குழப்பத்தை விளை விக்க முடியாது, என்றார். பி.ஏ.பி., வாய்க்காலில் சிலைகளை விசர்ஜனம் செய்ய, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !