உடுமலையில் விநாயகர் சிலை விசர்ஜனம்
ADDED :2624 days ago
உடுமலை: உடுமலை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், உடுமலை மேற்குஒன்றிய பகுதிகளில், 23 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று, (செப்., 14ல்)எரிசனம்பட்டியில், விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், பொருளாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். தொடர்ந்து, விநாயகர் சிலைகள், மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.