உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபத்தில்லா பயணத்திற்கு...

விபத்தில்லா பயணத்திற்கு...

வாகனத்தில் செல்வது ஆடம்பரம் என்ற நிலை போய் தற்போது சவால் என்ற நிலை உள்ளது. வாகனப் பெருக்கம், நெரிசல், டென்ஷன், பரபரப்பு, அலட்சியம்  என பல விஷயங்களால் விபத்து ஏற்படுகிறது.  ஆனாலும் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு.  பத்திரமாக சென்று வரவும், பயணம் இனிதாக அமையவும் செய்ய வேண்டிய பரிகாரம் இது.  

கந்தரனுபூதி பாடலை சொல்லி நெற்றியில் திருநீறு பூசுங்கள்.    

""உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

கிளம்பும் முன் ஹரி ஓம் என மூன்று முறை சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் இடமெல்லாம் முருகன் கூடவே வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !