இடையூறு செய்யாதீர்
ADDED :2599 days ago
மெக்காவில் இருந்து இடம் பெயர்ந்து மெதினாவில் நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் அவர் செயல்படும் விதம் குறித்து ஆயிஷா சொல்கிறார். ""நாயகம் படுக்கையில் இருந்து மிக மெதுவாக எழுவார். மேலாடையை எடுத்து அணிந்து கொண்டு மெதுவாக கதவைத் திறப்பார். பின் வழிபாட்டுக்குச் செல்வார். இப்படி சிறிதும் சத்தம் எழுப்பாமல் மென்மையாக அவர் செயல்பட என்ன காரணம் தெரியுமா? எனக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காகவே ""உங்களில் நல்லவர் உங்களின் மனைவியிடத்தில் சிறந்தவரே ""உங்களில் நல்லவர் உங்களின் பெண்களிடத்தில் நல்லவராக இருப்பார்என்னும் பொன்மொழிகள் நாயகத்தின் நற்பண்பை வெளிப்படுத்துகின்றன.