உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: பால் பணியாரம்

பிரசாதம் இது பிரமாதம்: பால் பணியாரம்

என்ன தேவை:

பச்சரிசி        - 200 கிராம்
உளுந்தம் பருப்பு    - 150 கிராம்
உப்பு        - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்        - 1/2 கிலோ
சர்க்கரை        - 150 கிராம்
தேங்காய்        - 1

எப்படி செய்வது: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லி மாவு போல் கெட்டியாகவும், நைசாகவும் உப்பு சேர்த்து அரைக்கவும். தேங்காயை துருவி 400 மி.லி., பால் எடுத்து சர்க்கரையைக் கலக்கவும்.  எரியும் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாவை கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்ததை தேங்காய்ப்பாலில் போட்டு ஊற வைத்து பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ப்பாலுக்கு பதிலாக பசும் பாலையும் காய்ச்சி பயன்படுத்தலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !