உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்

கோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_84230_104118142.jpgகோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_84230_104123230.jpgகோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_84230_104128481.jpgகோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_84230_10413249.jpgகோவையில் சாய்பாபா திருப்பாதுகை: தரிசிக்க திரண்ட பக்தர்கள்கோவை: ஷீரடியிலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகையை நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் ஷீரடி கோவில் பண்டிதர்களால், நடத்தப்படும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம்  சுகுணா திருமணமண்டபத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகா சமாதி நுாற்றாண்டு,  உற்சவ விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு முறை, ஷீரடி சாய்பாபாவின் தரிசனம் பெற நேற்று வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நேற்று பீளமேடு  சுகுணா திருமணமண்டபத்தில், ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம், காலை 7:00 மணிக்கு துவங்கியது, இரவு 9:00 மணி வரை தொடர்ந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, பாபாவின் திருப்பாதுகையை தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும், அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !