சேலத்தில், கிருஷ்ண கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு
ADDED :2938 days ago
சேலம்: சேலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜகணபதிக்கு, கிருஷ்ணகணபதி அலங்காரம் நேற்று செப்.,19ல் சாத்துபடி செய்யப்பட்டது. சேலம், தேர்வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த, 13ல் துவங்கியது.
ஏழாவது நாளான நேற்று செப்., 19ல் காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜை நடந்தது. பிறகு இளநீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில், கிருஷ்ண கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் கோவிலுக்கு வந்து
அருகம்புல், எருக்கமாலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர்.