நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவ தேரோட்டம்
காளையார்கோவில்: நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்ஸவ விழா, இந்தாண்டு கடந்த செப்., 13 ல் கொடியேற்றுதல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 8 ம் நாள் நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. நாளை கடைசி நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி திருவிழா நாளை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன், மேலாளர் இளங்கோ மற்றும் நகரத்தார் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.