சிவகங்கை நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED :2576 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது.
இக்கோயில் பிரமோற்ஸவ விழா செப்., 13 ல் கொடியேற்றுதல், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. எட்டாம் நாள் குதிரை வாகனத்தில் பெருமாள் பவனி நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று (செப்.,21ல்) காலை 9:40 மணிக்கு தேவிகளுடன் பெருமாள் எழுந்தருளியதும் தேரோட்டம் துவங்கியது. தேரோடும் வீதி வழியாக சுற்றி, காலை 10:30 மணிக்கு தேர் மீண்டும் கோயிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று (செப்., 22ல்) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.