பழநியில் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு
ADDED :2564 days ago
பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன்கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூன்று மணிநேரம்வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு, வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.நேற்று(செப்., 23ல்) ஞாயிறு விடுமுறை, அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் மூலம் மலைக்கு செல்ல இரண்டு மணி வரை காத்திருந்தனர்.மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால் குடங்கள், காவடிகள் எடுத்து கிரிவலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.-