உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜிலியம்பாறை அருகே ஜக்கம்மநாயக்கன்பட்டி திருவிழாவில் எருது விடும் விழா

குஜிலியம்பாறை அருகே ஜக்கம்மநாயக்கன்பட்டி திருவிழாவில் எருது விடும் விழா

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே ஜக்கம்மநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில், எருது விடும் விழா நடந்தது.குஜிலியம்பாறை ஒன்றியம், ஜக்கம்மநாயக்கன்பட்டியில் சுயம்பு கரட்டுக்கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசியில் 3 நாட்கள் திருவிழாநடைபெறும். இதில் குதிரை துளிர்த்தல், கரகம் பாலித்தல், தேவராட்டம், ஒயிலாட்டத்தை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கொழுக்கட்டை படைத்தல், எருது சந்திப்பு நிகழ்சிகள் நடந்தன. எருது விடும் நிகழ்சியில் திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட கோயில் காளைகள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து 2 கி.மீ., தூரமுள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச்சென்றனர். பிறகு அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து காளைகளையும் கோயிலை நோக்கி விரட்டிக்கொண்டு வந்தனர். அதில் திருச்சி,தோகமலை தாலுகா வாலியம்பட்டி மந்தையை சேர்ந்த காளை முதல் பரிசை வென்றது. காளைக்கு மாலை அணிவித்து எழுமிச்சை, மஞ்சள் பொடியை பரிசாக அளித்தனர். ஊர் பெரியவர் ஜக்கமநாயக்கர் தலைமையில் விழா நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்று எருது விழாவை ரசித்தனர்.வடமதுரை: வையம்பட்டி அடுத்த பாலப்பட்டியில் பெருமாள்சாமி கொழுக்கட்டை கோயில் எருது ஓட்டத் திருவிழா 75 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. கோயிலில் ராஜ கம்பளத்து நாயக்கர் மக்கள் தாங்கள் வளர்க்கும் எழுதுகள் இறந்த பின்னர் புதைக்கும் எருது குட்டை எனப்படும் பகுதியில் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர்.விழாவின் முக்கிய நிகழ்வான எருது ஓட்ட நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கில் வந்திருந்தனர். அவர்கள் வளர்க்கும் எருதுகளை 300 மீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து வழிபாட்டு தலத்தை நோக்கி அவிழ்த்துவிட்டனர். கொத்து, கொம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்பட்டிருக்கும் துண்டை தாண்டிச் சென்ற எருது மேல் மஞ்சள் பொடி தூவப்பட்டு முதலாவதாக வந்ததாக அடையாளம் காணப்பட்டது. முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை பழம், மஞ்சளும் தந்து மரியாதை செய்யப்பட்டது. எருது விழா நிறைவாக தேவராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !