/
கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்த செடிகள் கேள்விக்குறியான உறுதித்தன்மை
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்த செடிகள் கேள்விக்குறியான உறுதித்தன்மை
ADDED :2613 days ago
கரூர்: கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால், உறுதித் தன்மை பாதிக்கப்படுமோ என, பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். கரூரில், பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் முதன்மை கோபுரத்தில், பல இடங்களில் ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோபுரத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி சுத்தப்படுத்த கோவில் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கோபுரத்தில் ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளதால், பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். மரங்களாக வளரும் முன், அவற்றை அகற்ற வேண்டியது அவசியம்.