விழுப்புரம் வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :2614 days ago
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம், ஆனந்தவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் (செப்., 23ல்) மாலை 4.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 6.00 மணிக்கு வண்ணான் குளக்கரை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவியோடு, ஆனந்தவரதராஜ பெருமாளு க்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இரவு 8.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.