குடைவரை மண்டபத்தில் கருங்கற்களால் தரை தளம்
மாமல்லபுரம்: குடைவரை மண்டப பகுதிகளில், சிற்பக்கலை சின்னங்களை, பயணியர் கண்டுகளிக்கும் வகையில், தரை தளம், கருங்கற்களில் அமைக்கப்படுகிறது. மாமல்லபுர பல்லவ சிற்பக்கலைச் சின்னங்களைக் காண, ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். கோனேரி பகுதியில் இரு குடைவரை மண்டபங்கள், கருக்காத்தம்மன் கோவில் பகுதியில் பிடாரி ரதங்கள், ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளதால், பயணியர் அங்கு செல்வதில்லை. கோனேரி மண்டபப் பகுதியில், செம்மண் பாதை சீரழிந்து, முட்புதர் சூழ்ந்து, காதலர்கள், போதை ஆசாமிகள் மட்டுமே, தனிமைப் புகலிடமாக கருதி தஞ்சமடைந்தனர். இந்நிலையில், சிற்பக்கலைச் சின்னங்களை, பயணியர் கண்டுகளிக்கும் வகையில், தொல்லியல் துறையினர், முட்புதரை அகற்றி, பாதையை சீரமைத்தனர். குடைவரை மண்டப பகுதியில், கருங்கற்களால் பாதை அமைக்கின்றனர். இதே போல், பிடாரி ரதங்கள், புலிக்குகை பகுதிகளிலும், தரை தளம் அமைக்கின்றனர்.