உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பதி ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பதி ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:திருப்பதி சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று (செப்., 26ல்) தரிசனம் செய்தார்.

சாதூர் மாத விரத பூஜைகள் முடிந்து, ஜீயர்கள், திவ்ய தேச தரிசனம் செல்வது வழக்கம். அதன் படி, திருப்பதி சடகோப ராமானுஜ ஜீயர் நேற்றிரவு (செப்., 26ல்) 8:00 மணிக்கு ஆண்டாள் கோயிலுக்கு வந்தார்.

தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள் மரியாதை செய்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

ஆண்டாள் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி மற்றும் ராஜகோபுரத்தை ஜீயர் தரிசித்தார். திரளான பக்தர்கள் ஜீயரிடம் ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !